பிரதமர் திட்டத்தில் வீடு கட்டித்தருவதாக கோவையில் பாஜக-வினர் மோசடி- அனைத்துக் கட்சியினர் குற்றச்சாட்டு

பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டித் தருகின்றோம் எனக் கூறி கோவையில் அப்பாவி மக்களிடம் 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்யும் பாஜக-வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது என கோவையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிட கழக அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், தமிழ் புலிகள், எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.



கூட்டத்தில் பாரத பிரமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி தருவதாகக் கூறி பாஜக-வினர் விண்ணப்பம் விநியோகம் செய்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கு.இராமகிருட்டிணன், பாஜக-வினர் வார்டு வாரியாக அலுவலகம் திறந்து விண்ணப்பங்களை விற்பனை செய்து வருகின்றனர். 



இது போன்று பொது மக்கள் விண்ணப்பிக்க பணம் தரக்கூடாது. இந்த விண்ணப்பங்களை விற்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியும் பாஜக-வினர் விண்ணப்பங்களை வார்டு வாரியாக விற்கும் சட்டவிரோதமான செயலை செய்து வருகின்றனர். 

மாநில அரசும், உள்ளாட்சி நிர்வாகமும் செய்ய வேண்டிய பணியை கோவை மாவட்டத்தில் பணம் பெற்றுக்கொண்டு பாஜக-வினர் செய்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்தக் கோரி அனைத்துக் கட்சிகள் சார்பில் வரும் 27-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட உள்ளது. அப்பாவி மக்களிடம் 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை பணம் பெற்று நடத்தப்படும் இந்த மோசடியை தடுக்கவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், பாஜக-வினர் விண்ணப்பம் விற்பனை செய்யும் இடங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது" என கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...