பள்ளி நிர்வாகம் நன்கொடை கேட்பதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி தர்ணா

கோவை மாவட்டம், அன்னூர் வட்டத்தினைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் சத்யபிரியா. இவர், அதேப் பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி வித்யாலயா பள்ளியில் தற்போது நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி 449 மதிப்பெண்கள் பெற்று அப்பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.



இந்நிலையில், 11-ம் வகுப்பிற்கு வேறு பள்ளியில் சேர்வதற்காக சக்தி வித்யாலயா பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் கோரியதற்கு ரூ.1 லட்சம் நன்கொடை தந்தால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் தரப்படும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, சத்யா பிரியா மற்றும் அவரது தந்தை இளங்கோவன் ஆகியோர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இதுகுறித்து, செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறுகையில், எனது மகள் சத்யபிரியா 5ம் வகுப்பு முதல் சக்தி வித்யாலயா பள்ளியில் பயின்று வருகிறார். தற்போது 10ம் வகுப்பில் 449 மதிப்பெண் பெற்று மேற்குறிப்பிட்ட பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 11ம் வகுப்பிற்கு வேறு பள்ளியில் சேர்க்க மாற்றுச்சான்றிதழ் கேட்டதற்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை தர வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறுகிறது. இந்தளவிற்கு பெரிய தொகைக்கு நான் என்ன செய்வேன். 

கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...