வால்பாறையில் கன மழையால் கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பள்ளி மாணவர் மாயம்

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக இரவு பகலாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.



இதேப் போல வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்றில் இன்று வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் வழித்தடம் அருகே உள்ள தேயிலைத் தோட்ட செடிகளை மூழ்கடித்தபடியே வெள்ள நீர் செல்கிறது. இதனால் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடைவிதித்துள்ளனர்.

மேலும், கன மழை காரணமாக வால்பாறை பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியாக கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.



இந்நிலையில், வால்பாறை கூழாங்கல் ஆற்றில் இன்று குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லபட்டார். அவரை தேடும் முயற்சியில் வால்பாறை வனத்துரையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...