தொழில்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு வாரம் ஜூலை முதல் வாரத்தில் துவக்கம்

கோவை மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தொழில்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு வாரம் வரும் ஜூலை முதல் வாரத்தில் கொண்டாடப்படவுள்ளது. இதன் முதன் நிகழ்ச்சியாக ஜூலை 3ம் தேதியன்று மாணவ, மாணவியர் கலந்துகொள்ளும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைக்கவுள்ளார்.

இந்த பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து குதிரைப் பந்தய சாலை வழியாக சென்று அரசினர் கலைக் கல்லூரியை சென்றடையும்.

இதனைத்தொடர்ந்து, ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 4ம் தேதியன்றும், கிணத்துக்கடவு டிஇஎல்சி சீனியர் பெர்ஜென்டல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 5ம் தேதியன்றும், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 6ம் தேதியன்றும், தொடர்ந்து, ஆர்விஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 7ம் தேதியன்றும் தொழில்நெறி வழிகாட்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறும்.

மேலும், இந்நிகழ்ச்சிகளுடன் தாலுகா தலைமையிடங்களிலும் நடமாடும் பிரச்சார வாகனம் மூலம் தொழில்நெறி வழிகாட்டும் பிபிடி, பேனர்கள் மற்றும் சார்ட்டுகள் மூலம் விழிப்பணர்வு ஏற்படுத்தப்படும். உள்ளூர் பண்பலைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது.

கோவை மாவட்ட இளைஞர்கள் மேற்காணும் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...