ஓசை அமைப்பு சார்பில் 38 பயிற்சி வனவர்களுக்கு கோவையில் பயிற்சி முகாம்


கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஓசை அமைப்பானது சுற்றுச்சூழல் குறித்தான பல்வேறு பிரச்சனைகளில் பங்கேற்று சீரமைத்து வருகிறது. இந்நிலையில், ஓசை அமைப்பைச் சேர்ந்த சையது தலைமையில் இந்திய அளவில் இருந்து கோவை வந்த 38 பயிற்சி வனவர்களுக்கு மரம் மறுநடவு குறித்தான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.



முன்னதாக, கோவை மத்திய சிறையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் பார்வையிடப்பட்டது. தொடர்ந்து, சக்தி சாலை விரிவாக்கப்பணிக்காக மறுநடவு செய்யப்படவிருந்த மரங்கள் பார்வையிடப்பட்டன. அப்போது, இன்று வேப்ப மரம் ஒன்று மறு நடவு செய்யப்பட்டு குமரகுரு கல்லூரியில் நடப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பில் 32 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூன்று துணை வன பாதுகாவலர்கள் தலைமையில் பங்கேற்றனர்.

இதுகுறித்து துணை வன பாதுகாவலர் விஜய் நமது சிம்ப்ளி சிட்டிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-

ஓசை அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்பு எங்களது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. ஒரு மரத்தினை மறுநடவு செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், அதனை இவர்கள் மறுநடவு செய்வது மட்டுமின்றி அந்த மரம் மீண்டும் உயிர்பெற்று வளர்வதிலும் அக்கரைகொண்டு செயல்படுகின்றனர்.

தற்போது, இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 38 பேரில் 31 பேர் மகாராஷ்டிரா, 5 பேர் குஜராத், 2 பேர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இப்பயிற்சி வகுப்பினை சிறப்பான முறையில் பயின்றுள்ளனர்" என்றார்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...