மதுரையில் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

மதுரை, பாண்டிகோயில் அம்மா திடலில் நடைபெற்ற பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு தொடக்க விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி குதுவிளகேற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். பின்னர் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு தொடக்க விழாவில் சிறப்பு திட்டங்களை அறிவித்தார். 



அப்போது, நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி; புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மதுரை மாநகராட்சியின் எதிர்கால குடிநீர் தேவையினை கருத்தில் கொண்டு இன்னும் 60 ஆண்டுகளுக்கு மதுரை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடே நிலவக் கூடாது என்று தொலைநோக்கு திட்டத்தோடு அம்மா அவர்கள் விரும்பியபடி புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் மிகவும் நேசித்த மதுரை மாநகருக்கென சிறப்பு தனி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த திட்டம் சுமார் 156 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெரியார் அணை லோயர் கேம்ப் பகுதியிலிருந்து பெரிய ராட்சத குழாய்கள் மூலம் சுமார் 17 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் என்பதை இந்த தருணத்தில் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.



நிகழ்ச்சியில், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறியது. இதில், சட்டபேரவைத் தலைவர் தனபால், மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை, அமைச்சர்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...