தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் 47வது நிறுவனர் தின விழா மற்றும் பட்டங்கள் வழங்கும் விழா

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின்  47வது நிறுவனர் தின விழா மற்றும் தொலைதூர கல்வி இயக்கத்தில் படித்த 60 பேருக்கு பட்டங்கள் வழங்கும் விழா ஆகியவை இன்று கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. 



இந்த விழாவில் இந்திய வேளாண்மை  ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் பொது இயக்குனர் அய்யப்பன் கலந்து கொண்டு  இளநிலை பண்ணை தொழில் நுட்பம் படித்த விவசாயிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விவசாயிகளுக்காக நடத்தப்படும் இந்த பாடப்பிரிவில் இது வரை 332 விவசாயிகள் பட்டம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற  இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் 25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களை  பாராட்டி பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.



இந்த விழாவில் பல்கலைகழக துணைவேந்தர் ராமசாமி  மற்றும் பேராசியர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...