குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரிப்பதால் அரசு உதவி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

உடல் பருமனால் அவதிப்படும் குழந்தைகளுக்கு அரசு மருத்துவ சிகிச்சை வழங்க குழந்தைகளின் தாய் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



கோவை அடுத்த பன்னிமடை அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியைச் சார்ந்த ஜீவிதா என்பவர் தனது இரு குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார். அம்மனுவில், தனக்கு 8 வயது பெண் குழந்தையும், 6 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்த இரு குழந்தைகளும் பிறவியில் இருந்தே உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தனது மகன் பள்ளிக்கு செல்வதில்லை. இரண்டு குழந்தைகளின் உடல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது தொடர்பாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற தங்களுக்கு வசதி இல்லை" என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் குழந்தைகளுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து மருத்துவர்கள் சொல்ல மறுக்கின்றனர். குழந்தைகளின் பிரச்சனையை கண்டறிந்து அரசு உதவியுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ஜீவிதா கூறுகையில், இரண்டு குழந்தைகளும் தினமும் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். சிறுவன் உடல் பருமனால் நடக்க முடியாமல் வீட்டிலேயே இருக்கிறான். இரண்டு குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய சிகிச்சை பெற அரசு உதவி செய்ய வேண்டும்' என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...