பொள்ளாச்சி அருகே தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் பெண் பலி

பொள்ளாச்சி, சோமந்துரை சித்தூரில் இருந்து பொள்ளாச்சிக்கு தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தை அங்குலக்குறிச்சியைச் சேர்ந்த கருப்புசாமி (25) என்பவர் ஓட்டிவந்தார்.

அப்போது, பிலிச்சினாம்பாளையம் அருகே ஓட்டுநர் பேருந்தை வேகமாக ஓட்டிவந்த நிலையில் சாலையின் எதிரே கார் ஒன்று வந்துள்ளது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.



இதில், பேருந்தில் பயணம் செய்த உடுமலையைச் சேர்ந்த வளர்மதி (50) என்பவர் பலியானார். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...