கோவையில் தொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவையில் தொழிலதிபரிடம் 2.40 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் இன்று 60 பக்க குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. 

கோவையில் கடந்த 2011ம் ஆண்டு தொழிலதிபர் ராஜவேல் என்பவருக்கு கர்நாடக மாநிலத்தில் டெண்டர் எடுத்துக்கொடுப்பதாக கூறி 2.40 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சுகேஷ் சந்திர சேகர் மற்றும் அவரது தந்தை சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகாமல் சுகேஷ் சந்திரசேகர் தலைமறைவானார். அவரது தந்தை மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். 

இந்நிலையில் முடக்கப்பட்ட அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாக பணம் பெற்ற வழக்கில் சுகேஷ் தில்லியில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கோவை நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று சுகேஷ் சந்திரசேகரை நீதிமன்ற காவல் நீட்டிப்பிற்காக தில்லி காவல் துறையினர் கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். சுகேஷ் சந்திரசேகரின் தந்தை சந்திரசேகரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதனையடுத்து சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்ற காவலை வரும் 20-ம் தேதி வரை நீடித்து நீதிபதி நம்பிராஜன் உத்திரவிட்டார். மேலும் இன்று சுகேஷ் சந்திரசேகர் மற்றும் சந்திரசேகர் இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகலை வழங்கவும் உத்திரவிட்டார். இதனையடுத்து இருவரும் குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து சுகேஷ் சந்திரசேகரை தில்லி காவல் துறையினர் ரயில் மூலம் தில்லிக்கு அழைத்துசென்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...