கோவை மாநகராட்சி பள்ளியில் முதல்முறையாக சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



கோவையில் முதல்முறையாக மாநகராட்சி பள்ளியில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்க, 2013-ம் ஆண்டில் மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம், 4.5 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியிலுள்ள கால்பந்து மைதானத்தை மாற்றி அதற்கு பதிலாக ஹாக்கி மைதானம் அமைக்கப்படுகிறது.

2015ல் துவங்கிய இந்த பணி, தற்போது சுறுசுறுப்பாக நடக்கிறது. இதற்காக, 'ஆஸ்ட்ரோ டர்ப்' எனப்படும் செயற்கை புல் மைதானம் சர்வதேச தரத்தில் அமைக்கப்படுகிறது. சர்வதேச தர ஹாக்கி விளையாட்டுக்கு 91.4 மீட்டர் நீளம், 55 மீட்டர் அகலமான இடம் தேவை. ஆனால், தற்போது 100 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலமாக போதுமான இடம் உள்ளதால் சுற்றிலும் காலரி அமைக்கவும் வசதி உள்ளது. இப்பணியை, தற்போது தில்லி சின்காட்ஸ் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். 



அந்நிறுவனத்தின் மேற்பார்வையாளர் இதுகுறித்து கூறுகையில், ''6,500 சதுர மீட்டர் பரப்பளவில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படுகிறது. மைதானத்தை சுற்றிலும் நீர் வடிகால் அமைக்கப்பட்டு, குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு சில தினங்களில் இந்த பணியும் முடிந்து விடும். இதற்கு பின், மைதானத்தில் பாலியுரேதீன் என்ற கலவை ஊற்றப்படும். ஏற்கனவே தயார் நிலையில் உள்ள 'ஆஸ்ட்ரோ டர்ப்' மைதானம் முழுவதும் விரிக்கப்படும். அடுத்த சில வாரங்களில் மைதான பணி சிறப்பாக முடியும்,'' என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...