ஈஷா யோகா மையத்தில் ஜூலை 9 அன்று குருபௌர்ணமி அனுசரிப்பு

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் குரு பௌர்ணமி விழா ஜூலை 9ஆம் தேதியன்று (ஞாயிற்று கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஈஷா மையத்திற்கு வருகைபுரிந்து, கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நாளில் வரலாற்று சிறப்புமிக்க 112 அடி ஆதியோகியின் முன்னிலையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. நிகழ்ச்சியில் சத்குரு சொற்பொழிவு அளிப்பதுடன் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.

மேலும், இந்நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பினை டாடாஸ்கை குரு தொலைக்காட்சி (#1060) அல்லது http://isha.sadhguru.org/guru-purnima/ ஆகியவற்றில் காணலாம்.

மேலும், அன்றைய தினம் தியானலிங்கத்திற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பால் மற்றும் நீர் அர்பணிப்பு நடைபெறும். மாலை 6.30 மணிக்கு லிங்கபைரவி உற்சவ மூர்த்தி ஊர்வலம் மற்றும் மஹாஆரத்தி நடைபெறவுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...