அன்னூர் வட்டத்தில் சாக்கடை கழிவு நீர் குட்டையை அகற்றக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு

அன்னூர் வட்டம், உப்புத் தோட்டம் பகுதியில் உள்ள சாக்கடை கழிவு நீர் குட்டையை அகற்றக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட உப்புத் தோட்டம் ஆனந்த் தியேட்டர் பின்புறம் வார்டு எண் 3, 13 மற்றும் 14 உள்ள பகுதியில் அன்னூர் நகரப்பகுதியிலிருந்து வரும் சாக்கடை கழிவுகள் தேங்கி குட்டையாக நிரம்பியுள்ளது. மேற்படி இடமானது கோவிலுக்கு சொந்தமான சுமார் மூன்றறை ஏக்கர் நிலமும் அதில் உள்ள கிணறும் சாக்கடைக் கழிவுகளால் நிரம்பி குட்டை போல் தேங்கி உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சுகாதார கேட்டினால் பாதிக்கப்பட்டு டெங்கு, டைபாய்டு, மலேரியா மற்றும் சில மர்மக் காய்ச்சல்களினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அன்னூர் பேரூராட்சி மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் கழிவு நீர் குட்டையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...