கோவையில் தொழிலதிபரிடம் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

கோவையில் தொழிலதிபரிடம் 2.43 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராஜ்குமார் உத்திரவிட்டார்.

கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு கணபதியை சேர்ந்த தொழிலதிபர் ராஜவேல் என்பவருக்கு கர்நாடக மாநிலத்தில் டெண்டர் எடுத்து தருவதாகக் கூறி சுகேஷ் சந்திரசேகர் 2.43 லட்சம் ரூபாய் மோசடி செய்தார். இந்த மோசடி தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது தந்தை சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இவர், ஏற்கனவே இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் திஹார் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கோவை இரண்டாவது குற்றவியல் நீதமன்றத்தில் மோசடி வழக்கு நடைபெற்று வரும் நிலையில் வழக்கு விசாரணைக்காக டெல்லியில் இருந்து இன்று சுகேஷ் சந்திரசேகர் அழைத்து வரப்பட்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இன்று விசாரணையின் போது சுகேஷ் தரப்பில் இருந்து சில ஆவணங்கள் கோரப்பட்டதை அடுத்து, ஆவணங்களை சமர்பிக்க அரசு தரப்பில் காவல் அவகாசம் கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு மீதான விசாரணையை வருகின்ற 31-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து மீண்டும் சுகேஷ் சந்திரசேகர் இரயில் மூலம் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...