மது போதையில் வாகனம் ஓட்டிய 1500 பேரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது - போக்குவரத்து துணை ஆணையர் துரை தகவல்

கோவை மாநகரில் விபத்தினை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று போலீசார் அறிவித்திருந்தனர். 

இந்த நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உரிமங்களை ரத்து செய்ய சம்மந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் துரை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வாகனத் தனிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகனத்தனிக்கையின் போது தொடர்ச்சியாக மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் கண்டு அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய சம்மந்தப்பட்ட ஆர்.டி.ஓ.-க்கு காவல்துறை தரப்பில் இருந்து பரிந்துரை செய்யப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கி இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

தொடர்ந்து வார இறுதி நாட்களில் இந்த வாகனத்தனிக்கை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...