வால்பாறையில் தீபாவளி போனஸை உயர்த்தி வழங்கக் கோரி எஸ்டேட் தொழிலாளர்கள் சாலை மறியல்

வால்பாறை பகுதியில் உள்ள ஜெய்ஸ்ரீ நிறுவனத்திற்கு சொந்தமான சோலையார், முதல்பிரிவு மற்றும் 2வது பிரிவு, மூன்றாவது மற்றும் கல்லார், ஈட்டியார், ஆகிய எஸ்டேட்டில் சுமார் 700- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 



இந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வருடந்தோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படும். போனஸ் வழங்குவதில் தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் எஸ்டேட் பகுதியில் உள்ள அலுவலகத்தின் தகவல் பலகையில் தகவல் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தொழிலாளர்களுக்கு முன்னறிவிப்பு கொடுக்காமலேயே இன்று (அக்.,07) போனஸ் பெறுவதற்கான போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 



அதில், 9.5 சதவீதம் போனஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனே எஸ்டேட் அலுவலகத்திற்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சோலையார் எஸ்டேட் 2வது பிரிவை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் தொழிற்சாலைக்கு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அப்போது அவர்கள் கூறுகையில், எங்களுக்கு குறைந்தபட்ச போனஸ் குறித்து சில தொழிற்சங்க தலைவர்கள் மட்டுமே கையொப்பம் செய்திருந்ததால், நிர்வாகத்தை கண்டித்து, 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர். 

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறை இளம் ஆய்வாளர் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் சமரசம் பேசினார். மேலும், நிர்வாகத்தை அழைத்து பேசுவதாக கூறியதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், வால்பாறையிலிருந்து முடீஸ், சோலையார் அணை, பன்னிமேடு செல்லும் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...