கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் ப்ரோசோன் மாலில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கே.எம்.சி.எச் மருத்துவமனையில் பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம் அக்டோபர் 3ம் தேதியன்று துவங்க நடைபெற்று வருகிறது. வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் இலவச ஆலோசனை, டிஜிட்டல் மேமோகிராம், ஹைடெக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்ளிட்ட மார்பக பரிசோதனை சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து கே.எம்.சி.எச்.மருத்துவமனை மார்பக புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரூபா கூறியதாவது:-

மார்பக புற்றுநோய் நகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் 2 பெண்களுக்கு ஒருவருக்கு முற்றிய நிலையில்தான் மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரை காப்பாற்ற முடியும். பொதுவாக எல்லா புற்றுநோய்களையும் எந்த அறிகுறியும் இல்லாமல், துவக்க நிலையில் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அறிகுறி இல்லாமலிருந்தாலும் கூட மார்பக புற்றுநோயை பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம்.

பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும், மார்பு, மார்பகங்களில் வலி, மார்பகத்தில் கட்டி, மார்பகக்காம்புகளில் கசிவு, மார்பகக்காம்பு பின் நோக்கி செல்லுதல், அக்குள்களில் வீக்கம் ஆகிய அறிகுறிகளில் எதாவதொன்று இருந்தாலோ, இரத்தம் சம்பந்தமான நெருங்கிய சொந்தத்தில் யாருக்காவது மார்பக புற்றுநோய் இருத்தாலோ உடனடியாக மார்பக புற்றுநோய் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

இத்தகைய அறிகுறிகள் இல்லாவிட்டாலும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமுள்ள பெண்களும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மேலும் பெண்கள் தங்களது சுய பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாத ஆரம்ப நிலை கட்டிகளை கூட மேமோகிராம் பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம். இது ஒரு எக்ஸ்ரே முறையை போன்ற பரிசோதனையாகும். இதன் மூலம் மார்பகத்தில் கட்டி உருவாவதற்கு முன்பான சிறிய மாற்றங்களை கூட முன்கூட்டியே கண்டுபிடித்து விடலாம். கண்டுபிடிக்கப்படும் 90 சதவீத கட்டிகள் புற்றுநோய் இல்லாத கட்டிகளாகவே இருக்கும். 10 சதவீத கட்டிகள் மட்டுமே புற்றுநோயாக இருக்கும். இவற்றை முன்கூட்டியே கண்டுபிடிக்கும்போது முழுமையாக குணப்படுத்திவிடலாம்.

இங்கு உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம் அக்டோபர் 3 முதல் 31ம் தேதி வரையிலான இம்மாதம் முழுவதும் நடக்கிறது. இதில் ரூ.2,750 கட்டணமுள்ள டிஜிட்டல் மேமோகிராம் ரூ.999 சலுகை கட்டணத்திலும், ரூ.900 கட்டணமுள்ள ஹைடெக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரூ.450 சலுகை கட்டணத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மார்பக புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை நிபுணரின் ஆலோசனையும் வழங்கப்படுகிறது. இத்தகைய பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதை கண்டறியலாம். பாதிப்பு நிலை துவக்கத்திலேயே கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைகள் மேற்கொண்டு மார்பக புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தலாம் என்று மருத்துவர் ரூபா கூறினார்.

இதனை தொடர்ந்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா  ஜி பழனிச்சாமி கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் மார்பக புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சலுகை கட்டணத்தில் பெண்களுக்கான மார்பக பரிசோதனைகளையும் , இலவச ஆலோசனைகளையும் இம்மாதம் முழுவதும் வழங்கிவருகிறோம் என்று கூறினார்.

மேலும் விபரங்களுக்கும், பரிசோதனைக்கான முன்பதிவிற்கும், மார்பக புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரூபா, கே.எம்.சி.எச் மருத்துவமனை, அவினாசி ரோடு, கோவை, தொலைபேசி எண் : +91 98940 08800, +91 422 4324151, , இ-மெயில் : [email protected] ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...