கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. ஐஜி ரம்யா பாரதி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை :

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கோவை சூலூர் அருகேயுள்ள பள்ளபாளையம் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் கார்த்திக் (33) மற்றும் மோகன்குமார் (30) ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி அளித்த பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், இருவரையும் ஓராண்டு காலம் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தில் 10 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, தென்னைத் தோட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் பாரதிபுரத்தைச் சேர்ந்த மோகன்குமார் ஆகியோரை சூலூர் போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.

இதில், போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற கார்த்திக் மாடியில் இருந்து குதித்ததில் கை, கால் முறிவுகளுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மோகன்குமார் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், இருவர்மீதும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அவர்கள் ஜாமீனில் வெளியே வராமல் தடுக்கும் வகையில், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறை பரிந்துரை செய்தது.

அதன்பேரில், ரம்யா பாரதி அனுப்பிய பரிந்துரையை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு காலம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்ததோடு மட்டுமல்லாமல், விரைவாக குண்டர் சட்டத்தையும் பாய்ச்சிய கோவை காவல்துறையின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...