டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் ஆய்வு

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம், சிக்கதாசன்பாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய குடியிருப்பு வளாகம், தேக்கம்பட்டி ஊராட்சியில் இன்று (11.10.2017) டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அவர் பேசியதாவது, கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமான லார்வாக்களை அழிப்பதற்கு அபேட் மருந்துகளை தெழிக்கப்பட்டு வருகின்றது. டெங்குவை கட்டுக்குள் வைப்பதற்கு தினந்தோறும் ஊரக வளர்ச்சித்துறை, பொதுசுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மழைக்காலங்களில் சுகாதார மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில், டெங்கு மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய் ஏற்படுவதை தடுக்க முடியும். நகர, மற்றும் கிராமப்பகுதிகளில் ஒவ்வொரு இடங்களாக பிரித்து களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கொசு மருந்து தெளித்தல், அபேட் மருந்து ஊற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. 



நீண்டநாட்களாக தண்ணீர் தேக்கி வைக்காத வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திடும் வகையில், சுகாதார அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீரை சுகாதாரமாக சேமிக்கவும், சுகாதார முறைப்படி வீடுகளை பராமதிக்கவும் அனைத்து வீடுகளிலும் கொள்கலன்களில் அபேட் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றது. 

மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றம் அங்கன்வாடி மையங்களில் பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கசாயம் வழங்குதல், ஒவ்வொரு பகுதிகளிலும் மருத்துவ முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. பொது மக்களிடத்தில் சுகாதாரக் கல்வி அளித்தல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்துதல், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சலுடன் வருபவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 

எந்த ஒரு காய்ச்சல் அறிகுறி தென்பட்டாலும் அதை டெங்கு காய்ச்சல் என்றே கருத்தில் கொண்டு அந்தந்த பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் மருத்துவ முகாம்களில் பரிசோதிக்க வேண்டும். இதுபோன்று தமிழக அரசு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குதல் வேண்டும்.  இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டார். 



இக்கூட்டத்தில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பானுமதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்மாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபால், ரவிச்சந்திரன் மற்றும் சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...