குடிக்க பணம் தர மறுத்த மனைவியை கழுத்தை நெறித்து கொன்ற மில் ஊழியருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகிளா நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பு.

ராமநாதபுரம் மாவட்டம் நெரிஞ்சிபாடி பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ் (28). கோவை ஒண்டிப்புதூர் அடுத்துள்ள கதிர் மில் பஞ்சாலையில் பணியாற்றிய இவர் அதே மில்லில் வேலை பார்த்து வந்த முருகேஷ்வரிக்கும் காதல் ஏற்பட்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

திருமனதிற்கு பின் பாக்யராஜிற்கு குடிபழக்கம் ஏற்பட்டு மது அருந்த பணம் கேட்டு மனைவுடன் அடிக்கடி தகறாரில் ஈடுபட்டு வந்தவர் வேலைக்கும் ஒழுங்காக செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2.11.2013 அன்று பாக்யராஜ் முருகேஷ்வரியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். முருகேஷ்வரி பணம் தர மறுக்க ஆத்திரமடைந்த பாக்யராஜ் முக்காலி கொண்டு கழுத்தை நெறித்து கொலை செய்தவர். அதை மறைப்பதற்கு முருகேஷ்வரி தூக்கில் தொங்கவிட்டு  தற்கொலை செய்ததது கொண்டது போல் நாடகமாடியுள்ளார்.

இது தொடர்பாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டது. பிரேத பரிசோதனையில் முருகேஷ்வரி கழுத்து நெறித்து கொல்லபட்டது உறுதி செய்யபட பாக்யராஜ் மீது வழக்கு பதியப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கொலை செய்தல்,தடயத்தை மறைத்தல் ஆகிய 2 குற்றங்களும் நிரூபிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து இன்று தீர்ப்பு அளித்த மகிளா நீதிமன்ற நீதிபதி அல்லி (பொறுப்பு) 302 பிரிவின் கீழ் பாக்யராஜிற்கு ஆயுள் தண்டனையும் 2500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தவர் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் 201 பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி அபராதம் கட்ட தவறும் பட்சத்தில் 3 மாத  சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இவை அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்கும்படி மகிளா நீதிமன்ற நீதிபதி அல்லி (பொறுப்பு) தீர்ப்பு வழங்கினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...