நீலகிரியில் டெங்கு குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்



கோவை, திருப்பூர், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளதால் நீலகிரியில் டெங்கு பரவாமல் பாதுகாக்க அதிகாரிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என நீலகிரி மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் சந்திராகாந்த் பி. காம்ளே தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், அரசு முதன்மைச் செயலர் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் சந்திராகாந்த் பி. காம்ளே தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலையில், டெங்கு குறித்த விழிப்புணர்வு அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் இல்லாவிட்டாலும், டெங்கு நோய் பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர் மற்றும் கேரள மாநில எல்லை பகுதிகள் அருகில் இருப்பதால், அதிக விழிப்புணர்வுடன் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற சந்திராகாந்த் பி. காம்ளே அறிவுறுத்தினார்.

மேலும், கூடலூர் அரசு மருத்துவமனை மற்றும் சாதாரண காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளையும் பார்வையிட்டனர். கள ஆய்வின்போது, முதன்மைச் செயலாளர் காசிம் வயல் பகுதியில் சாக்கடை குப்பை கொட்டும் பகுதி மற்றும் காய்ச்சல் பாதித்த பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டு, வீடுகளை சுற்றி நீர் தேங்காதவாறும், கொசுப்புழு உருவாகா வண்ணம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும்  அறிவுறுத்தினார்.



தொடர்ந்து, பொதுமக்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து, காய்ச்சல் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி கூறினார். விளம்பரங்களின் மூலம் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், இணை இயக்குநர் சுகாதாரம் ரகுபாபு, துணை இயக்குநர் பொற்கொடி, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் ராஜகோபால், உதவி இயக்குநர் ஊராட்சிகள் மேகநாதன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...