பாரதியார் பல்கலைக் கழக துணை வேந்தர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பாரதியார் பல்கலைக் கழகத்தில் தகுதி உடையவருக்கு பணி வழங்காமல் மற்றவர்க்கு பணி வழங்கிய அப்பல்கலைக் கழக துணை வேந்தர் மீது நடவடிக்கை கோரி கோவை மாவட்டம், நவாவூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ லட்சுமி பிரபா இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இதுகுறித்து ஸ்ரீ லட்சுமி பிரபா கூறியதாவது:-

"கடந்த 2011 ஆம் ஆண்டு பையோ டெக் பிரிவில் முதுகலை பட்டம் முடித்த நான் பாரதியார் பல்கலைக் கழகத்தில் துணை பேராசிரியர் காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். 

எஸ்.சி அல்லது அருந்ததியர் பிரிவினருக்கு முன்னுரிமை அளித்து இந்த பணியிடம் நிரப்ப வேண்டும். அந்த பிரிவினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வராதபட்சத்தில் அதற்கு அடுத்தபடியாக உள்ள பிரிவில் இருந்து வரும் பெண் விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

ஆனால், தற்போது மேற்குறிப்பிட்ட பையோ டெக் துணை பேராசிரியர் காலிப் பணியிடம் மாற்று பிரிவில் ஆண் விண்ணப்பதாரர் மூலம் நிரப்பப்பட்டுள்ளது.



இது தொடர்பாக அப்பல்கலைக் கழக துணை வேந்தரிடம் முறையிடுகையில் சரியான பதில் வழங்கவில்லை. மேலும், பாரதியார் பல்கலையில் 20 வருடத்திற்கும் மேலாக ஓட்டுநராக பணிபுரிந்து வந்த எனது கணவர் கனகராஜையும் பணியில் இருந்து நீக்கிவிட்டனர்.

இதுகுறித்து, மனித உரிமை ஆணையம், தேசிய ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் வழக்கை திரும்பப் பெற்றால் மட்டுமே எனது கணவருக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என மிரட்டல் விடுக்கப்படுகிறது.

எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு எனது கணவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனவும், தகுதியுடைய எனக்கு துணை பேராசிரியர் பணி வழங்க வேண்டும் எனவும் புகார் மனு அளித்துள்ளேன்" என்றார்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...