வெள்ளலூர் அருகே பட்டாசுக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் கொள்ளை

கோவை மாவட்டம் வெள்ளலூர் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளலூர், மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் தீபாவளிப் பண்டிகையையொட்டி, அரசின் உரிமம் பெற்று தற்காலிகப் பட்டாசுக்கடை வைத்துள்ளார். இவர், நேற்று விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார்.  இன்று (16.10.2017) மீண்டும் கடையை திறக்க வந்த போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அசோக்குமார் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், உள்ளே சென்று பார்த்த போது, சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள்கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போத்தனூர் போலீஸார் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 

தீபாவளி பண்டிகையையொட்டி, பலர் இது போன்ற தற்காலிகப் பட்டாசுக்கடை அமைத்து விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது நடைபெற்றுள்ள கொள்ளை சம்பவம், அப்பகுதியில் பிற பட்டாசுக்கடைக்காரர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...