ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் பருப்பை உண்டதால் உடல்நலம் பாதிப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு

ரேசன் கடைகளில் விநியோகிக்கும் மஸ்தூர் எனப்படும் சிவப்பு நிற பருப்பை உண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்த ஜகநாதன் என்பவர் பொதுவிநியோக திட்டத்தின் மூலம், அப்பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் மஸ்தூர் பருப்பை வாங்கி பயன்படுத்தி உள்ளார். இதனால் வயிற்று வலி மற்றும் உடல் உபாதைகள் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 



முன்னதாக, இது தொடர்பாக ஜகநாதன் பேசுகையில்,  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மஸ்தூர் பருப்பை பயன்படுத்த வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு, தற்போது ரேஷன் கடைகளில் அதனை விநியோகம் செய்து வருகிறது. இதனை உட்கொள்ளும் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கிறது. மஸ்தூர் பருப்பு விநியோகிக்க கூடாது. இதனை வலியுறுத்தி சுகாதாரம் மற்றும் உணவுத்துறை அமைச்சர்களுக்கு இந்த பருப்பை அனுப்ப உள்ளேன்.என்று  கூறினார். 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...