தொலைதூர கிராமங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சியர்

மாவட்டத்தின் தொலைதூர கிராமங்களில் நடமாடும் மருத்துவமுகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கள்ளப்பாளையம் ஊராட்சி சின்னகுயிலி கிராமத்தில் இன்று (அக்டோபர் 16) ஒவ்வொரு வீடு வீடாக சென்று டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பொதுமக்களிடத்தில் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்ட நிர்வாகம் மழைகாலங்களில் உண்டாகக்கூடிய தொற்றுநோய்கள் மற்றும் காய்ச்சல்களை கவனமுடன் கையாண்டு நிவர்த்தி செய்து வருகின்றது. டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய ஏடிஸ் லார்வாக்களை ஒழிக்கும் பணியும் மாவட்டம் முழுவதிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

டெங்கு காய்ச்சல் எளிதில் குழந்தைகளை கட்டுப்படுத்தும் என்பதனால் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் நிலவேம்பு குடிநீர் அனைத்து அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளிகள் ஒவ்வொரு மாதத்தின் முதல் 5 தினங்களில் கட்டாயமாக வழங்கப்பட்டு வருகின்றது.



மேலும், பொதுமக்கள் அதிகம் செல்லும் இடங்களிலும், மாநகராட்சி சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், அம்மா உணவகங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், தொலைதூர கிராமங்களிலும் நடமாடும் மருத்துவமுகாம்கள் மூலம் தொடர் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



சுகாதார பணியாளர்கள் மூலம் வாரந்தோறும் அனைத்து வீடுகளிலும் ஏடிஸ் கொசுப்புழு வளரும் சூழல் உள்ள இடங்களாக அறியப்படும், மேல்நிலை மற்றும் கீழ்நிலைத் தொட்டிகள், திறந்த டிரம்கள் ஆகியவற்றில் கொசுப்புழுக்களை கண்டறிந்து அழித்து வருகின்றனர். மேலும் உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள், தேவையற்ற ஆட்டுக்கல் போன்றவற்றையும் கண்டறிந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....