குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் மீனவ சமுதாய இளைஞர்கள் சிறந்து விளங்க ஆயத்த பயிற்சி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித்தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம் மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளிக்கப்பட இருப்பதாகவும், கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய குழந்தைகள் இப்பயற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்று (அக்.,16) வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: மீன்வளம், நிதி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கடந்த ஜுலை 11-ம் தேதி சட்ட பேரவையில் அறிவித்ததில் மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை மீனவ கூட்டுறவு சங்க கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தைச் சார்ந்த படித்த 20 பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து தனிக்குழுவாக அமைத்து, அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் ஒரு புதிய திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது. 

இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in-லிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்துறை/இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட மீன்துறை உதவிஇயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம். 

மேலும், விண்ணப்பதாரர்கள் மீன்துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிநாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வரும் 23-ம் தேதி பிற்பகல் 05.00 மணிக்குள் ஈரோடு மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம் , எண்.4, எஸ்.வி. காம்ப்ளக்ஸ் 2வது தளம், வீரப்பம்பாளையம் பிரிவு, திண்டல் அஞ்சல், ஈரோடு 638-012 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...