தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க தடைகளில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி மனு

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்கக்கோரி பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க ஆண்டுதோறும் பட்டாசுகளை வெடிக்க கோவை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில், கடந்த 13-ம் தேதி கோவை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்கக்கோரி பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், இந்துக்களை மிரட்டுகின்ற தொ னியில் எச்சரிக்கைவிட்டதை பாரத் சேனா கண்டிக்கிறது. கிறிஸ்துமஸ் அன்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான புத்தாண்டு அன்றும் நள்ளிரவில் பட்டாசு வெடித்தும் வாண வேடிக்கைகளை வெடித்து கொண்டாடிகின்றனர். அப்போதெல்லாம், எந்த அறிக்கையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடுவதில்லை. பட்டாசுகள் வெடிப்பதற்கு எவ்வித தடைகளையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதிக்காமல் இருப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...