தீபாவளி பண்டிகையின் போது விபத்து நேர்ந்தால் அதை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை தயாராக உள்ளது - மாவட்ட அலுவலர் பேட்டி

நம் நாட்டில் பண்டிகை என்றாலே கொண்டாட்டங்களுக்கு அளவில்லை. மற்ற பண்டிகைகளைப் போல அல்லாமல் தீபாவளி பண்டிகை தனிச்சிறப்பு வாய்ந்தது. வேற்றுமைகளை மறந்து அனைத்து தரப்பு மக்களும் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்கின்றனர். பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது ஆனந்தமாக இருந்தாலும், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தீ விபத்துக்கள் ஏற்படுவது கவலையளிக்கும் விதமாக உள்ளது.

இந்த சூழலில், தீபாவளியின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள மாவட்ட தீயணைப்பு துறை தயார் நிலையில் உள்ளதாக தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு தீயணைப்பு துறை மேற்கொள்ள இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தொடர்பாக அவர் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- 

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, கணபதி, பீளமேடு, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் என எட்டு  தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இங்கு தீயணைப்புப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 165 பேர் பணியாற்றி வருகின்றனர். 16 தீயணைப்பு வாகனங்கள் உள்ளன. 

தீயணைப்பு வாகனம்

 

கோவை மாநகர் பகுதிக்குள் நான்கு தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்கு உள்ள தீயணைப்பு வாகனங்கள் கோவையின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட உள்ளன.

உக்கடம், ஒப்பணக்கார வீதி, என்.எஸ்.ஆர்.ரோடு, சத்தி சாலை, காந்திபுரம் மேம்பாலம், சிங்காநல்லூர் சிக்னல் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளது.  தீவிபத்து போன்ற அசம்பாவித சம்பங்கள் ஏற்பட்டால் அந்த பகுதிக்கு உடனடியாக தீயணைப்பு வாகனம் செல்லும் விதமாகவே வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன. எனவே, விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று pinvilaivukalai (பெருவிபத்தை) தவிர்க்க முடியும். 

பட்டாசுக்கடைகள் 

பட்டாசுக்கடைகளை மேற்பார்வையிட பகுதி வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், பட்டாசுக்கடைகளுக்கு தினமும் சென்று பாதுகாப்பை உறுதி செய்வார்கள். பட்டாசுக்கடை வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படும் நேரத்தில் அவர்களுக்கு தக்கஉதவிகள் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சுமார் 10 தீ விபத்துகள் ஏற்பட்டன. இந்த ஆண்டு அந்த மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீயணைப்புத் துறையினர் சார்பில் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். 

பாதுகாப்பான தீபாவளி 

பட்டாசுகள் எளிதில் தீப்பற்றக்கூடியவை. உராய்வினால் கூட அவைகள் தீப்பிடிக்கலாம். எனவே பட்டாசுகளை சேமித்து வைக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்களின் மேற்பார்வையிலேயே குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். தளர்வான ஆடைகளை அணியாமல் இருப்பது நல்லது. மருத்துவமனை, போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்கள் மற்றும் குடிசை பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். 

பொறுப்புணர்வோடு தீபாவளியை கொண்டாடினால், அது அனைவருக்கும் பாதுகாப்பான தீபாவளியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.  

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....