திருநங்கைகளை பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துவதாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

கோவையில் பாலியல் தொழிலை செய்ய வலியுறுத்தி மிரட்டுவதாகக் கூறி திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் வாயில் முன்பு சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வரும் நிலையில் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடாமல் தடுக்க மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்களன்று (அக்டோபர் 23) நடைபெற்ற மனு நீதி நாள் முகாமின் போது திருநங்கைகள் மாயா லைலா, கல்பனா, தனுஸ்ரீ ஆகிய மூவரும் தங்களை சில திருநங்கைகள் பாலியல் தொழிலை தொடரச் சொல்லி வற்புறுத்துவதாகவும், அவர்களிடம் உள்ள தங்கள் பணத்தை மீட்டுத் தரக்கோரியும் மனு அளித்திருந்தனர்.

இது தொடர்பாக கோவை துடியலூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரையும் போலீசார் சமாதானப்படுத்த மட்டுமே முயற்சித்ததாகவும் தீர்வு பெற நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மூவரும் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாயா லைலா, கல்பனா, தனுஸ்ரீ ஆகிய மூவரும் ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு சாலையில் படுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மூவரையும் சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...