குழந்தைகள் வன்கொடுமை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி இமயம் முதல் குமரி வரை சைக்கிள் பிரச்சாரம்

தூய்மையான இந்தியா, குழந்தைகள் வன்கொடுமை தடுக்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி வாலிபர் ஒருவர் இமயம் முதல் குமரி வரை சைக்கிள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.



கோவையை சேர்ந்த தண்டபாணி வேணுகோபால் (27) என்பவர் குழந்தைகள் வன்கொடுமை தடுக்க வேண்டும், தூய்மை இந்தியாவை வலியுறுத்தி கடந்த காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி, கடந்த அக்டோபர் 2-ம் தேதி காஷ்மீரில் இருந்து தனது சைக்கிள் பேரணியை தொடங்கினார். அவருடன் நண்பர் சதீஷ்குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.



13 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் விழிப்புணர்வு பிரச்சாரம் , கன்னியாகுமரியில் கடந்த 15-ம் தேதி நிறைவடைந்தது. 

சுமார் 4,000 கி.மீ. வரையிலான இந்த சைக்கிள் பயணத்தின் போது, மோதல்கள், கல்வீசித் தாக்குதல், கண்ணீர்புகைக் குண்டு மற்றும் பல்வேறு காலநிலை மாற்றங்கள் போன்றவற்றை தண்டபாணி வேணுகோபால் கடந்து வந்துள்ளார். 



கின்னஸ் சாதனைக்காக மட்டுமில்லாமல், குழந்தைகள் வன்கொடுமை தடுக்க வேண்டும், தூய்மை இந்தியாவை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த சைக்கிள் பிரச்சாரம் பல்வேறு மாநில மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது இந்த விழிப்புணர்வு பயணத்திற்கு, ரோட்டரி கிளப், பைவே பிரைவேட் லிமிடேட், பார் அசோசியேஷன் ஆப் கோவை மற்றும் ஹுளிக்கல் போன்றவைகள் நிதி ஆதரவு அளித்தனர்.



தனது சாகசப் பயணம் குறித்து சிம்ப்ளிசிட்டிக்கு தண்டபாணி வேணுகோபால் கூறுகையில், இந்தப் பயணம் என்பது எளிதானது அல்ல. வழித்தடங்கள் மற்றும் தங்கும் இடங்கள் ஏற்கனவே, திட்டமிடப்பட்டது. பயணத்தின் போது, மழை மற்றும் மோசமான வானிலை போன்ற இடர்பாடுகளை சந்திக்க நேரிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலான தூரத்தை வெறும் 8 நாட்களில் மோட்டார் சைக்கிளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.



இதைத் தொடர்ந்து, தண்டபாணி வேணுகோபால், நாட்டின் கிழக்குப் பகுதியான அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து மேற்குப் பகுதியான குஜராத் வரை மீண்டும் சைக்கிள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...