கோட்டைமேடு பகுதியில் முறையாக குப்பைகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

கோவை, அக்டோபர் 30: கோட்டைமேடு பகுதியில் முறையாக குப்பைகளை அகற்ற வலியுறுத்தி கோவை மாநகர வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சி, 82-வது வார்டுக்குட்பட்ட கோட்டைமேடு பகுதியில் நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் இந்த குப்பைகள் சாலையில் அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்திற்கு பெரும் இடையூரை ஏற்படுத்துகிறது.

மேலும், இப்பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பொருட்கள் அனைத்தும் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக, பள்ளியின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டுள்ள கேட் மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயகரமான நிலையில் உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...