சென்னையில் ஒரு மணிநேரத்திற்கு முன்பே மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு

அக்டோபர் 30: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னையில் மாணவர்களை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வீட்டிற்கு அனுப்புமாறு அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் காலை முதல் தற்போது வரை விடாமல் மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் மேலும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில், இலங்கைக்கு அருகே நேற்று நிலை கொண்ட வளிமண்டல சுழற்சி அதே இடத்தில் நிலவுகிறது. இதனால் வரும் 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டம் அனைத்து இடங்களிலும் உள் மாவட்டத்தில் சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ,ராமநாதபுரம், புதுச்சேரி பகுதிகளில் இன்று(அக்.,30) மாலை கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் மாணவர்களை ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் திரு. அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...