கோவையில் அதிகரித்து வரும் ”செல்ஃப் டிரைவிங் கார்” கலாச்சாரம் - வாடகை கார் ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக புகார்



கோவை, அக்டோபர் 30 : ”செல்ஃப் டிரைவிங் கார்”  முறை அதிகரித்து வருவதால், வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திரு.டி.என்.ஹரிஹரனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறியுள்ளதாவது, கோவை மாவட்டத்தில் தற்போது இயங்கி வரும் கர்நாடக மாநிலத்தின் ”செல்ஃப் டிரைவிங் கார்” பயன்பாடு அதிகரித்துள்ளது . இதனால், வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நடப்பாண்டில் நாடாளுமன்றம்  மோட்டார் வாகனச் சட்டம் 2017 என்ற சட்டத்தை  அமல்படுத்த உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ஏற்படும் விளைவுகள் என்னவென்றால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஓட்டுநர் பயிற்சி பள்ளி, வாடகைக்கு வாகனம் ஓட்டும் அலுவலகம், இவை அனைத்தும் ஒரே அலுவலகம் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் தொழில் செய்ய வேண்டும் என்ற முறையில் அந்த சட்டத்தை வடிவமைத்து உள்ளார்கள். இதன்மூலம் மோட்டார் தொழில் பாதிப்பு அடையும் அவலம் உருவாகியுள்ளது. 

அதாவது, எஃப்.சி.(FC) வேலைகள் மற்றும் வாகன வேலைகள் அனைத்தும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பார்க்க முடியும் என்பதால், பல வாகனங்களை இயக்க முடியாமல் போகும் சூழ்நிலை உருவாக உள்ளது. 

மேலும், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் என்ற முறை பொதுமக்களிடையே இருக்காது. ஒவ்வொரு முறையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இடம் புதிதாக பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். வேக கட்டுப்பாட்டு கருவையை சுற்றுலா வாகனங்களுக்கு பொருத்துவதை நீக்க வேண்டும். 8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மட்டும் பேட்ச் உரிமம் முறையை ரத்து செய்ய வேண்டும். வாகன காப்பீட்டுத் தொகையை குறைக்க வேண்டும்.

அண்டை மாநிலங்களை போல அனைத்து வாகனங்களுக்கும் டி-போர்டு அனுமதி கொடுக்க வேண்டும். கனரக வாகனங்களுக்கு கொடுக்கும் அனைத்து மாநிலங்களுக்கு சென்ற வர உரிமத்தை போல, சுற்றுலா வாகனங்களுக்கும் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...