விமான நிலைய விரிவாக்கத்திற்காக குழு அமைக்கப்படும்: முதலமைச்சருக்கு சைமா பாராட்டு


கோவை, அக்டோபர் 31: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்படும் என அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு சைமா தலைவர் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் தொழில் துறையினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை மனுக்களை ஏற்று தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, கடந்த வாரம் ஒரு உயர்நிலைக் குழு கூட்டத்தை கூட்டி விமான நிலைய விரிவாக்கத்தை துரிதப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 28ம் தேதியன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் திருமதி. கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நில நிர்வாக ஆணையர் தலைமையில் ஒரு குழு அமைப்பது என முடிவெடுக்கப்பட்டு, அந்த குழு நிலம் கையகப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் திரு. பி.நடராஜ், தமிழக முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை வியாபார மற்றும் தொழிற்துறைக்கு மையமாக விளங்கிவரும் நிலையில், வெளிநாட்டு விமான போக்குவரத்திற்கு வசதி இல்லாதது பெரிய குறையாக இருக்கிறது. இதனால், வர்த்தகத்தை மேம்படுத்த முடியாத நிலை உள்ளது.

தமிழகம் ஜவுளித் தொழிலில் மூன்றில் ஒரு பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் 70 சதவிகிதம் உற்பத்தி மற்றும் வர்த்தகம் கோவை பகுதியில் உள்ளது. கோவைக்கு வெளிநாட்டு விமான போக்குவரத்து வசதி கிடைக்கும்பட்சத்தில் நேரமும், பணமும் மிச்சமாகும். விமான நிலைய விரிவாக்கத்தின் மூலம் கோவை தொழிற்துறை வளர்ச்சியடைந்து புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு சைமா தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...