"ஜிஎஸ்டி வரியால் உள்நாட்டு வணிகம் பாதிப்பு"- டி.வெள்ளையன்

கோவை, அக்டோபர் 31: சரக்குகள் மற்றும் சேவைகள் வரி உயர்வு (ஜிஎஸ்டி) செயல்படுத்தப்பட்டதால், பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு டி.வெள்ளையன் குற்றம் சாட்டினார் .

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் மருந்தக திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-



"இந்தியாவில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியினால் வியாபார மற்றும் வர்த்தகர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த வரியினால் தனியார் பெரு நிறுவனத்தினர் மட்டுமே பயனடைந்து வருகின்றனர். மதிப்புக் கூட்டு வரியினை விட ஜிஎஸ்டி வரி அதிகரித்துள்ளது. 

சில வெளிநாட்டு அரசாங்கங்கள், தங்கள் நலன்களுக்காகவும், இலாபங்களுக்காகவும் ஜிஎஸ்டி வரி விதிப்பினை செயல்படுத்துவதில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளன. ஒரு நாடு, ஒரே வரி என்பது முற்றிலும் பயனற்றது. இந்த வரிவிதிப்பானது இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு நல்ல இலாபத்தை வழங்குகிறது. அடிமட்ட உள்ளூர் வியாபாரிகள் நஷ்டத்தில் ஆழ்ந்துள்ளனர். 

உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பதால் மட்டுமே இந்திய பொருளாதாரம் முன்னேற்றமடையும். சந்தையில் இந்திய தயாரிப்புகளை மட்டுமே வாங்க மக்கள் முன்வர வேண்டும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் மாநில துணை பொதுச் செயலாளர் ஒய்.எம்.ஹபிபுல்லா பங்கேற்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...