வால்பாறையில் பசுமாட்டை கடித்துக் கொன்ற சிறுத்தை - தொடர் அச்சுறுத்தலால் பொதுமக்கள் பீதி

கோவை, நவம்பர் 2 : கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டைச் சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வால்பாறையை அடுத்துள்ள கருமலை எல்.டி. டிவிசனில் தேயிலை தோட்ட தொழிலாளி விஜயகுமாரி என்பவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த 4 ½ வயது மதிக்கத்தக்கப் பசுமாடு அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வியாழக்  கிழமை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, தேயிலைச் செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி தாக்கியதில், பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. 

இந்தச் சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கருமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்திலேயே சிறுத்தை நுழைந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால், மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். மேலும், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...