அதிக கட்டணத்தை வசூலிக்கும் கல்லூரிக்கு எதிர்ப்பு - பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் கைது

கோவை, நவம்பர் 2 : கோவையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழை வழங்க முடியும் எனக் கூறிய கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். 

கிணத்துக்கடவு இம்மிடிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் அசோக். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவர் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்து முடித்தார். இந்த நிலையில், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகமாக ரூ.70 ஆயிரத்தைச் செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் வழங்க முடியும் என அந்தக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகத்திடமும், ஆதி திராவிடர் நலத்துறையிலும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர் தரப்பில் கூறப்படுகின்றது. 



இந்த நிலையில், மாணவர் அசோக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கோரிக்கை அட்டை அணிந்து கையில் தட்டுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் தொடர்ந்து படிக்க முடியவில்லை என்றும், இதனால் பிச்சை எடுத்து கட்டணத்தை செலுத்தப் போவதாகவும் தெரிவித்த மாணவர் அசோக், படிக்கும் போது கூடுதல் கட்டணத்தை கேட்காமல் தற்போது படித்து முடித்த பின் சான்றிதழ் வழங்க வேண்டிக் கோரிய நேரத்தில் முழு கட்டணத்தையும் கல்லூரி நிர்வாகம் கேட்பதாக குற்றம்சாட்டினார். 

மேலும், இது தொடர்பாக, அரசு அதிகாரிகள் பேசினாலும் கல்லூரி நிர்வாகம் மாற்றுச் சான்றிதழை கொடுக்க மறுப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அசோக்கை காவல் துறையினர் கைது செய்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...