தாராபுரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

கோவை, நவ.3: திருப்பூரிலிருந்து நேற்று இரவு தாராபுரம் நோக்கி வந்துகொண்டிருந்த காரும் பழனியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் திருப்பூரை சேரந்த நிதி நிறுவன ஊழியர் ராமநாதனின் மனைவி சத்யா, மற்றும் அவரது குழந்தைகள் 6 வயது மித்தின், 8 வயது துவாரிகா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேய பலியானார்கள்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த ராமநாதனுக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவத்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "ராமநாதனின் சகோதரர் கண்ணன் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் இடையன்கோட்டையில் இறந்துவிட்டதால் அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குடும்பத்துடன் காரில் சென்றபொழுது ஏற்பட்ட விபத்து இது ." 

இசம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் அதிர்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மூன்றுபேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கபட்டுள்ளன.

இவ்விபத்து குறித்து கொண்டடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...