தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்த தகவல்களை வழங்க வரும் 7-ம் தேதி கிராமசபைக் கூட்டம் கூடுகிறது

கோவை, நவம்பர் 3 : தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அன்னூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான தகவல்களை வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வரும் 7-ம் தேதி நடக்கிறது. 

2016 - 2017 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கடந்த மாதம் 30-ம் தேதி முதல் வரும் 07-ம் தேதி வரை சமூக தணிக்கை மேற்கொள்ள,  ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார். 

கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்போதி, காட்டம்பட்டி, ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாத்தூர், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குளத்துப்பாளையம், பொள்ளாச்சி(வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கபூலிபாளையம், கல்லிப்பட்டி, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜல்லிபட்டி, பொள்ளாச்சி (தெற்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழையூர், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெம்மரம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் இந்த தணிக்கையை மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல்கள் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 11.00 மணியளவில் நடக்கும் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...