இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் 'பத்மாவதி' திரைப்படத்தை தடை செய்ய விஷ்வ இந்து பரிஷத் மனு


கோவை, நவம்பர் 6: இந்தி திரைப்படமான 'பத்மாவதி' இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதால் அதனை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

"இந்தியில் வெளியாகவுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் ராணி பத்மினியின் வரலாறு மறைக்கப்பட்டு உண்மை சம்பவங்களை திரித்துக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன . இதன் காரணமாக இத்திரைப்படத்தை குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் திரையிட தடை செய்துள்ளன  .

அதே போல் தமிழகத்திலும் 'சர்ச்சைக்குரிய' இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். அவ்வாறு தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பு தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்."

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...