தேனீ வளர்ப்பில் ஈடுபட்டால் மகசூல் அதிகரிக்கும்


கோவை, நவம்பர் 6: தேனீ வளர்ப்பில் ஈடுபட்டால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர் மகசூல் அதிகரிக்கும் என்று கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக, பூச்சியியல் துறை பேராசியர் முனைவர் மா.இரா. ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.



கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் வறட்சி மற்றும் குறைவான பயிர் மகசூல் என பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இது போன்ற பிரச்சனைகளுக்கு தேனீ வளர்ப்பு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.



இதுக்குறித்து  முனைவர். ஸ்ரீநிவாசன் கூறுகையில், “தேனீ வளர்ப்பு குறித்து கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் இயற்கை வழி விவசாயம் தான். தேனீ வளர்ப்பு என்பது இயற்கை விவசாயத்தின் ஓர் அங்கம்.



தேனீ வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டால் பயிர் மகசூல் அதிகரிக்கும். பெட்டிகளில் வளர்க்கப்படும் தேனீக்கள் விவசாய நிலங்களில் ஏக்கருக்கு 5 பெட்டி என வைத்துவிட்டால் போதும். ஒரு பெட்டியில் மூன்றாயிரம் தேனீக்கள் வரை வளரும்.தேனீக்கள் மகரந்த சேர்க்கையை பயிர்களிடையே உற்பத்தி செய்துவிடும் இதனால் பயிர்கள் அதிக மகசூல் தரும் .,” என்றார்.

மேலும் ஆப்பீள், பீச், பேரிக்காய், எலுமிச்சை, மா போன்ற பழ வகைகளிலும் முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, கொத்தமல்லி போன்ற காய்கறி வகைகளிலும்  தேனீக்களால் அதிக மகசூல் பெறமுடியும் என்றார் அவர்.

சமீப காலமாக தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்த இளைஞர்கள் தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேனீ வளர்ப்பில் எளிதாக ஆண்டுக்கு சுமார் நான்கு லட்சம் வரை சாம்பாதிக்கலாம் என்பதே இதற்கு காரணம்.



தேனீ வளர்ப்பில் ஈடுபட கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக, பூச்சியியல் துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் பிரதி வாரம் 6-ம் தேதி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்காக நுழைவு கட்டணமாக ரூபாய் 25௦ ஒரு நபருக்கு வசூலிக்கப்படுகிறது.

இதுக்குறித்து அவர் தெரிவிக்கையில், பயிற்சி வகுப்புகளில் தேனீ வளர்ப்பு குறித்து பாடம் மற்றும் செயல்முறை பாடம் நடத்தப்படும். பயிற்சி வகுப்பு வருபவர்களின் ஆர்வம் தூண்டப்படும் என்றார்.



இந்திய தேனீக்களை வளர்க்க ஒரு பெட்டிக்கு சுமார் 2 ஆயிரம் செலவாகும், இந்த தேனீக்கள் மூலம் வருடத்திற்கு 1௦ கிலோ வரை தேன் எடுக்கமுடியும். அதுவே இத்தாலி தேனீக்கள் வளர்த்தால் வருடத்திற்கு 2௦ கிலோ தேன் எடுக்கமுடியும் இந்த வகை தேனீக்கள் வளர்க்க ஒரு பெட்டிக்கு ரூபாய் 5 ஆயிரம் செலவாகம்.

“ஒரு நபரால் எளிதில் 1௦ பெட்டிகள் வரை தேனீக்கள் வளர்க்க முடியும். ஒரு முறை 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்து 1௦௦ பெட்டி தேனீக்கள் வளர்த்தால்  வருடா  வருடம் அதன் மூலம் நான்கு லட்சம் வரை லாபம் சம்பாதிக்க முடியும். தேன் மட்டுமல்லாது தேன் மெழுகு, ராயல் ஜெல்லி போன்றவையும் நாம் விற்க முடியும்  இதிலும் அதிக லாபம் கிடைக்கும் எனவே தேனீ வளர்ப்பில் ஈடுபட்டால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது” என முனைவர். ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...