பொள்ளாச்சி நகராட்சியின் நகர நில அளவை ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியாக மாற்றம்

கோவை, நவம்பர் 6: கோவை மாவட்டம் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் மூலம் பொள்ளாச்சி நகராட்சியின் நகர நில அளவை ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியாக மாற்றப்பட்டுள்ளன. இச்சேவையினை மாவட்ட ஆட்சியர் திரு. த.ந. ஹரிஹரன் தொடங்கிவைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (நவம்பர் 6) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் இந்திய மின் ஆளுமை நில பதிவுருக்கள் மேலாண்மை திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி நகராட்சியின் நகர நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழியாக மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் இந்திய மின் ஆளுமை நில் பதிவுருக்கள் மேலாண்மை திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி நகராட்சியின் நகர நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழியாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் பொள்ளாச்சி நகராட்சி பகுதியிலுள்ள நிலங்களுக்கு இணையவழியில் பட்டா மாறுதல் மனுக்களை எளிதில் சமர்ப்பிக்கவும் நிலப்பதிவேடுகளின் நகல்களை எவ்வித கட்டணமுமின்றி இணையவழியில் பதிவிறக்கம் செய்யவும் இயலும்.

இந்த நகல்கள் மின்கையொப்பம் செய்யப்பட்டுள்ளதால் இதனை வங்கி மற்றும் சேவைகளுக்கு சமர்ப்பிக்க யாருடைய ஒப்பமும் பெற வேண்டாம். இனிவரும் காலங்களில் பொதுமக்கள் நகர்ப்புற நில ஆவணங்கள் நகல்களை பெற அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இணைய வழி சேவையின் மூலமாக எளிதாகவும் விரைவாகவும் எப்பொழுதும் எங்கிருந்தும் நகர நிலப்பதிவேட்டின் நகல்களை www.tn.gov.in/eservices என்ற இணைய பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. துரை. ரவிச்சந்திரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் திருமதி. காயத்ரிகிருஷ்ணன், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் திரு. கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...