2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு

நவம்பர் 7: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தேதியினை மீண்டும் ஒத்திவைத்து சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் ரூ.1.70 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர்.

தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 6 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் தீர்ப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் இருந்து மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த தேதி இன்று (நவம்பர் 7) அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சில ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டி இருப்பதால் தீர்ப்பு தேதி வரும் டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தீர்ப்புகள் தயார் செய்ய இன்றும் 3 வாரங்கள் தேவைப்படுகிறது என்பதால் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி  ஷைனி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி திங்களன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. மேலும், இந்தச் சந்திப்பு 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பைப் பாதிக்கும் என்று அனைத்துத் தரப்பினராலும் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது அத்திருப்தியை   ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...