டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்


பல்லடம், நவம்பர் 7: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரி விசைத்தறிகளை நிறுத்தி ஊர் பொதுமக்கள் ஆயிரக்கனக்கானோர் காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்கினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பள்ளபாளையம் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை நீதிமன்ற உத்தரவை அடுத்து அங்கிருந்து அகற்றப்பட்டது. 

இதனை அடுத்து காளிபாளையத்தில் திறக்கப்பட்ட இக்கடை அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அடைக்கப்பட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தேவராயம்பாளையத்தில் சதீஸ்குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் திறக்கப்பட்டது.

இந்நிலையில் இப்பகுதியில் குடியிருந்து வரும் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்திற்கும் டாஸ்மாக் நிர்வாக த்திற்கும் புகார் மனு அளித்தனர். 

இதனிடையே டாஸ்மாக் கடையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று அப்பகுதி பொதுமக்கள் சுமார் 5000 த்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளை நிறுத்தி ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து தனியார் மண்டபத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றவேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.

பொதுமக்களின் இப்போராட்டம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...