பெண்களே! தாய்ப்பால் தானம் செய்ய முன்வாருங்கள் - கோவை அரசு மருத்துவமனை

கோவை, நவம்பர் 7: மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளுள் முதன்மையானது உணவு. ஒரு மனிதன் வைட்டமின் நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில் உட்க்கொள்ளும்போது ஆரோக்கியம் பெறுகிறான். ஆனால், பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே முழுமையான ஊட்டச்சத்தை தருகிறது. 

தாய்ப்பால் சரியான விகிதத்தில் கிடைக்காத காரணத்தால் பல பிஞ்சுக் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் வளர வேண்டிய நிலை இருந்தது. இந்த அவலத்தை களைய கடந்த 2006-ம் ஆண்டு முதல் தமிழக அரசு தாய்ப்பால் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. 

தொடர்ந்து, குழந்தைகள் நலத்தை பேணிக்காக்க அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.



கோவை அரசு மருத்துவமனையை பொறுத்தவரையில் 120 லிட்டர் கொள்ளளவு கொண்ட தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டுள்ளது. 

தாய் உடல் நிலை சரியில்லாதது, தாய் இறப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிஞ்சுக் குழந்தைகள் தாய்ப்பால் கிடைக்காமல் போவதை தடுக்கும் வகையில் இந்த தாய்ப்பால் வங்கி நிறுவப்பட்டுள்ளது. 

இந்த சூழலில் மருத்துவமனையில் அமைந்துள்ள தாய்ப்பால் வங்கிக்கு தானம் செய்து பச்சிளங்குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர்.V.பூமா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 



இந்த மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டு, தாய்ப்பால் தானம் குறித்து பல்வேறு வகைகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வூ ஏற்படுத்தப்பட்ட்து. அதன் விளைவாக, தினமும் 100-க்கும் மேற்ப்பட்ட தாய்மார்கள் இங்கு தாய்ப்பால் தானம் செய்கின்றனர். ஒரு நாளைக்கு குறைந்த பட்சமாக 100-முதல் 150 குழந்தைகள் இதனால் பயனடைகின்றனர். இன்னும் தாய்ப்பால் தானம் தேவையான ஒன்றாக உள்ளது. ஏனெனில், பிறந்த குழந்தைகள் உட்கொள்ளும் ஒவ்வொரு துளி தாய்ப்பாலும் அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்த வல்லது . 

சுகாதாரமான முறை

அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் வார்டு மிகவும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இங்கு அமைந்துள்ள தாய்ப்பால் வங்கியில் அதி நவீன தொழில் நுட்பத்துடன் தாய்ப்பால் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலில் பாக்டீரியாக்கள் உள்ளதா என்பதை ஆராய்ந்து பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பின்பே குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. தானமாக பெறும் தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு 6 மாதங்கள் வரையில் சேமித்துவைத்து உபயோகிக்க முடியும். 

பயம் வேண்டாம்

'தாய்ப்பால் தானம் கொடுத்தால் உன் பிள்ளைக்கு தாய்ப்பால் கிடைக்காமல் போய்விடும்' என்று பெரியவர்கள் கூறுவதை நம்பவேண்டாம். தாய்ப்பால் கொடுக்க கொடுக்க அது உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும். எனவே, எந்த மூட நம்பிக்கைகளையும் நம்ப வேண்டாம். உன்னதமான சேவையாக கருதி தாய்ப்பால் தானம் செய்ய பெண்கள் முன்வர வேண்டும் . 

இவ்வாறு அவர் கூறினார். 

மருத்துவமனையில் தாய்ப்பால் தானம் செய்த பெண் ஒருவர் கூறுகையில், 'நம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைத்தால் மட்டும் போதாது. அனைத்து குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்க வேண்டும்.பெண் என்ற உன்னதத்திற்கு கிடைத்த தாய்ப்பால் வரமானது அனைத்து குழந்தைகளுக்கும் பயன்பட வேண்டும். தயவு செய்து தாய்ப்பாலை வீணாக்காதீர்..!' என்றார். 

'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற கூற்றின் சாராம்சத்தை அறிந்து, நவீன காலத்து பெண்கள் தாய்ப்பால் தானம் செய்தால் வருங்கால மனிதர்களை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க முடியும்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...