பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது பெண் புகார் - வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

கோவை, நவம்பர் 7: கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு.ஏ.கணபதி மீது பெண் ஒருவர் அளித்தப் புகாரின் பேரில், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கோவை வடவள்ளி அடுத்த நவாவூர் பகுதியில் வசித்து வருபவர் திருமதி. என்.ஸ்ரீலட்சுமி பிரபா. பயோ டெக்னாலஜி பாடப்பரிவில் முனைவர் பட்டம் பெற்ற இவர், கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மீது வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



அதில், கடந்த ஆண்டு ஸ்ரீலட்சுமி பிரபா கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால் பணிக்கான அனைத்து வகையான முன்னுரிமை இருந்தும், பெண் உதவி பேராசிரியையை நியமிக்க வேண்டிய இடத்தில், பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரின் சகோதரரை முறைகேடாக அந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நியமனம் நியமித்துக் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், பிடிஎஃப் (PDF) எனப்படும் முனைவர் பட்ட மேற்படிப்பிற்காகப் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு விண்ணப்பம் செய்ததாகவும், ஆனால், தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், தனது படிப்பைத் தொடர விடாமல் பல்கலைக்கழக நிர்வாகம் இடையூறு செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பல்கலைக்கழகத்தில், தொகுப்பூதிய அடிப்படையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த தனது கணவரையும் பணியில் இருந்து நிறுத்தியதாக அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக, ஸ்ரீலட்சுமிபிரபா அளித்த புகாரின் பேரில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மீது வழக்குப் பதிவு செய்யக் காவல்துறையினருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, அவர் மீது வடவள்ளி காவல்துறையினர் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மூன்று பரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், துணைவேந்தர் கணபதி மீது தொடரப்பட்ட வழக்கு முற்றிலும் பொய்யான ஒன்று எனக் கூறி, பாரதியார் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. எந்தவித முன் அனுபவமில்லாத நிலையில், ஸ்ரீலட்சுமி பிரபா உதவிப் பேராசியர் பதவிக்கு விண்ணப்பம் செய்து இருப்பதாகவும், நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு வேலைகிடைக்காததால் பல்கலைக்கழகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழக மானியக்குழுவின் மூலம் முனைவர் பட்ட மேற்படிப்பைப் பயிலுவதற்கு தேவையான விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படாததால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்தது.

தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வந்த ஓட்டுநரும், ஸ்ரீலட்சுமிபிரபாவின் கணவருமான கனகராஜ், அடிக்கடி மது அருந்திவிட்டு பணிக்கு வந்ததாகவும், துணைவேந்தர் அலுவலகத்தில் தகராறில் ஈடுபட்டதாலும், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனிடையே, இன்று செய்தியாளர்களிடம் துணைவேந்தர் தம்மை சாதி பெயரினைக் கூறி திட்டியதாகப் பொய் கூறுவது மிகுந்த வருத்தத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், பொய்யாகப் புகார் அளித்துள்ள ஸ்ரீலட்சுமி பிரபாவின் புகாருக்குக் காவல்துறையிடம் தகுந்த ஆதாரங்களோடு விளக்க அளிக்கத் தயாராக உள்ளதாக பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...