நவ.10 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

கோவை, நவம்பர் 8: கோவை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் வரும் நவம்பர் 10ம் தேதியன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணிகளை ஆய்வு செய்திட 10 உறுப்பினர்கள் கொண்டு "உள்ளூர் நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு" அமைக்கப்படவுள்ளது. இதற்காக, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் நவம்பர் 10ம் தேதியன்று காலை 11 மணியளவில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் ஊராட்சியில் நடைபெறும் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...