வரும் 11-ம் தேதி புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்கான இசை நிகழ்ச்சி


நவம்பர் 09 : தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ”பாடவா உன் பாடலை” என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களால் ”கேன்செல்லர் பவுண்டேசன்” என்ற தனியார் தொண்டு நிறுவனம் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் புற்றுநோயிக்கு எதிரான போராட்டம் என்ற நோக்கில், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ”பாடவா உன் பாடலை” என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வரும் 11-ம் தேதி சித்ரா கருத்தரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை சென்னையைச் சேர்ந்த ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் நடத்துகின்றனர். 1980-ம் ஆண்டுகளில் வெளிவந்த படங்களின் பாடல்கள் பாடப்படுகிறது. இதில், பங்கேற்கும் பார்வையாளர்களிடம் இசை அல்லது இந்த நிகழ்ச்சி தொடர்பான கேள்வி கேட்கப்படும். அதற்கு, முதலில் பதிலை கூறுபவருக்கு, தனக்கு பிடித்தமான பாடலை மேடையில் பாடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ரூ.250 மற்றும் ரூ500 டிக்கெட்டுக்கள் வழங்கப்படுகின்றன. இந்தக் கட்டணத் தொகையானது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ”பாடவா உன் பாடலை” இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுக்களை திரு. பத்மநாபன் (95004 -98333), திரு.கிருஷ்ணசுவாமி (98430 - 46664) ஆகியோரைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...