சோதனச்சாவடிகளில் வாகனதணிக்கை: இரண்டு நாட்களில் 468 பேர் மீது வழக்கு

கோவை, நவம்பர் 9: கோவை மாநகர எல்லைக்குள் உள்ள 10 சோதனைச்சாவடிகளில் நடத்தப்பட்ட வாகனதணிக்கையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 468 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-

கோவை மாநகரில் விபத்துக்களை குறைக்கும் விதமாக தினந்தோறும் காலை 7 மணி முதல் 9 மணி வரை மாநகர எல்லைகளில் உள்ள 10 சோதனைச்சாவடிகளில் வாகனதணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வாகனதணிக்கையின் போது ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்றும் (8-ம் தேதி) இன்றும் (9-ம் தேதி) இரண்டு நாட்களில் 468 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தினமும் தொடரும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...