லயன்ஸ் சார்பில் இலவச சர்க்கரை நோய் முகாம் 50,000 பேருக்கு

கோயம்புத்தூர், நவம்பர் 10: கோவையில் லயன்ஸ் மாவட்டம் 324 பி1, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் டாக்டர்.வி.ராஜேந்திரன் டயபட்டிக் சென்டர் ஆகியவை இணைந்து இன்று (10.11.2017) கோவை மாநகரம் முழுவதும் 60 இடங்களில் இலவச சர்க்கரை நோய் கண்டுபிடிப்பு முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாமை நடத்தின.



இதன் துவக்க விழா காலை 8.00 மணிக்கு மத்திய அரிமா சங்கம் சார்பில் கோவை இயில் நிலையத்தில் நடைபெற்றது.

இதில் இரயில்வே பயணிகளுக்கு இலசவ பரிசோதனை நடைபெற்றது. விழாவிற்கு லயன்ஸ் மாவட்ட தலைவர் லயன் மெக்சன் பாலு தலைமை வகித்தார். லயன்ஸ் மாவட்ட ஆளுநர் கே. காளிச்சாமி முன்னிலை வகித்து முகாமை துவக்கிவைத்தார். 

கோவை இரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் எல்.சின்னராஜு தலைமை வகித்தார். கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் ரோட்னி மோரீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

இந்த முகாம் குறித்து திரு. காளிச்சாமி கூறியதாவது :- உலகளவில் இன்று நீரிழிவு நோய் என்பது மிகப்பெரிய கவலையை ஏற்படுத்திடும் வகையில் உள்ளது. 

பல்வேறு நாடுகளிலும் இந்நோய் பரவலாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் 8 முதல் 10 சதவீதம் வரை பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு லயன்ஸ் சங்கம் உலகளவில் இந்த முகாம் திட்டத்தை முதன்மையாக எடுத்து செயல்படுத்தி வருகின்றது. 

கோவையில் இன்று நடைபெறும் 60 முகாம்களில் தலா 250 முதல் 300 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டும் சர்க்கரை நோய் விழித்திரை பரிசோதனைக்கு கோவை அவினாசி ரோடு மீனாட்சி மஹாலில் வரும் 14 ம் தேதி நடைபெறும் முகாமில் பரிசோதித்துக் கொள்ளலாம். 

அதற்கு மேலும் கண் விழித்திரை பாதிப்பு உள்ளவர்கள் நவம்பர் மாதம் இறுதி வரை கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்று முற்றிலும் இலவசமாக வழித்திரை பரிசோதனை மற்றும் லேசர் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். 

இந்த முகாமானது கோவையை தொடர்ந்து வரும் 14 - ம் தேதி திருப்பூரில் 60 இடங்களிலும், 17 - ம் தேதி பொள்ளாட்சியில் 33 இடங்களிலும், உடுமலையில் 9 இடங்களிலும், 21 - ம் தேதி உதகையில் 17 இடங்களில் என ஆகமொத்தம் 177 இடங்களில் முகாம் நடத்தி சுமார் 50,000 பேருக்கு பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...